• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் - தளர்வுகளே நாளைக்குதான் வீட்டுக்கு போங்கன்னு அனுப்பிய போலீஸார்

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் - தளர்வுகளே நாளைக்குதான் வீட்டுக்கு போங்கன்னு அனுப்பிய போலீஸார்

மீன் வாங்க குவிந்த மக்கள்

மீன் வாங்க குவிந்த மக்கள்

மெரினா கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

  • Share this:
ஊரடங்கு தளர்வுகள் நாளை அமலுக்கு வரும் நிலையில் இன்றே சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிந்தனர்.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சென்னை மெரினா கடற்கரை மக்களின் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் நாளை திங்கட்கிழமை முதல் காலை 5 முதல் 9 வரை மெரினா கடற்கரையில் மக்கள் நடைபயிற்சிக்கு செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இதற்கான அரசாணை வெளிவந்தது.

Also Read: சொகுசு காரில் ஆடு திருடிய கும்பல்.. விரட்டிய கிராம மக்கள் - காரை விட்டு ஓடிய கும்பல்

இந்நிலையில் அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக நினைத்து அதிகமானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு சிரமப்பட்டனர்.
அதேபோல் மெரினா கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் கார் நிறுத்துவதற்கு போலீசார்  ஏற்பாடு செய்திருந்தனர். அப்படி காரை நிறுத்த வந்தவர்கள் கடற்கரைக்குச் சென்று விடுவதாகவும் நாளை முதல் தான் கடற்கரை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதால் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: