மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்: மின்கட்டண மையங்களில் அலைமோதிய கூட்டம்

மின் கட்டணம் செலுத்த இன்று  கடைசி நாள் என்பதால் மின் கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்: மின்கட்டண மையங்களில் அலைமோதிய கூட்டம்
மின் கட்டணம் செலுத்த இன்று  கடைசி நாள் என்பதால் மின் கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
  • Share this:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் மின் கட்டண மையங்களும் மூடப்பட்டிருந்தன.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை மின் கட்டண மையங்கள் செயல்படவில்லை.

இதனைத் தொடர்ந்து  நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நலன் கருதி ஜூலை 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என மின் வாரியம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் மின் கட்டணம் செலுத்த இன்று  கடைசி நாள் என்பதால் மின் கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு மின்கட்டண மையத்திலும் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்து கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். மின் கட்டண மையங்களில்  சமூக இடைவெளி பின்பறபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

மின் கட்டணம் செலுத்தா விட்டால் அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். எனவே மின் கட்டணம் செலுத்துவதற்கு இந்த மாதம் இறுதி வரை கால அவகாசம் தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்ஆன்லைனில் சில தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாததால், அதிக அளவில் மக்கள் மின் கட்டண மையங்களில் குவிந்து வருகின்றனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading