• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புரசைவாக்கம் பகுதியில் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள்!

புரசைவாக்கம் பகுதியில் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரசைவாக்கம் பகுதியில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக திரண்டனர்.

  • Share this:
    வருகின்ற நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடத நிலை இருந்தது. தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் மத்திய மாநில அரசுகள் தலைவர்களை அறிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து தீபாவளிக்கு புத்தாடை வாங்க தி.நகர், ரங்கநாதன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க திரண்டனர். பண்டிகை காலங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகர காவல்துறை இந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.

    புரசைவாக்கம் பகுதியில் ஒலிபெருக்கிகள் அமைத்து அதன் வாயிலாக பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

    அதே நேரத்தில் பண்டிகை காலம் நெருங்குவதால் நோய் பரவலுக்கு வித்திடும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், கொரோனாவை மறந்து பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: