• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை

மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் - வைகோ எச்சரிக்கை

வைகோ

வைகோ

கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வைகோ வலியுறுத்துயுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கத் திட்டமிட்டால் 1965-ல் நடந்த மொழிப்போர் மீண்டும் வெடிக்கும் என்று மதிமுக பொதுச்செயளாலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18-க்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.

தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையில் 2-வது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.

கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்துள்ள 484 பக்க தேசிய கல்விக் கொள்கையில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தி மொழி பேசாத  மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும். அதற்காக மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்.

6-ம் வகுப்பிலிருந்து இந்தி மொழியைக் கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-ன் மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்வியை அரசுப் பொறுப்பிலிருந்து முற்றிலும் விடுவித்து, கார்ப்பரேட், தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ள கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Also see... எந்த மொழியாக இருந்தாலும் மொழித்திணிப்பை திமுக எதிர்க்கும் - கனிமொழி

Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: