முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "செந்தீயைத் தீண்டாதே, தள்ளிநில் இந்தியே.." வைரமுத்து ட்வீட்

"செந்தீயைத் தீண்டாதே, தள்ளிநில் இந்தியே.." வைரமுத்து ட்வீட்

வைரமுத்து

வைரமுத்து

மொழிப்போர் தியாகிகள் தினம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்ட உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் சிலைகள், உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் தினம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

“மொழிப்போர் வீரர்களை

நெற்றி நிலம்பட

வணங்குகிறோம்

கண்ணகி

மதுரையில் இட்ட

நெருப்புக்குப் பிறகு

தமிழ்நாட்டைச் சுட்டது

தமிழுக்காக

எங்கள் மறவர்கள்

தேகத்தில்

மூட்டிக்கொண்ட தீ தான்

தேகங்கள்

அணைந்துவிட்டன

தீ அப்படியே

செந்தீயைத் தீண்டாதே

தள்ளிநில் இந்தியே” என்று பதிவிட்டுள்ளார்.

அதன் கீழ் #தமிழ், #தமிழ்நாடு என இரண்டு ஹாஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Tamil, Vairamuthu