• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்த பாஜக பிரமுகர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்த பாஜக பிரமுகர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை அருகே ஆவடியில் 16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரித்த பாஜக பிரமுகர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
ஆவடியை சேர்ந்தவர் வெங்கட் நாராயணன்(43), அவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில்  உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பதற்கான உரிமத்தை பாஜக பிரமுகர் ரமணன் மற்றும் அவரின் நண்பர் சதீஷ்குமாருக்கு  வழங்கியுள்ளார்.
நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட்நாராயணா தம்பதியினருக்கு தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 6ஆம் தேதி அன்று குடும்பத்துடன் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில்  புகார் அளித்துள்ளனர். மேலும் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விற்பனை உரிமத்தை ரத்து செய்ய தடங்கள் மனுவையும் நேற்று அளித்துள்ளனர்.

Also Read : அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.84 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல்... சென்னையில் பரபரப்பு

இதனை அறிந்த ரமணன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட் நாராயணன் வீடு புகுந்து அவரது மனைவி மற்றும் குழந்தையை கத்திமுனையில் மிரட்டி வெங்கட்நாராயணா வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்து வந்து மாலை 6 மணிக்கு மேல்,16 ஏக்கர் நிலத்தை வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெங்கட்நாராயணன் நேற்று மதியம் காவல் ஆணையர் அலுவலகம் வந்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பினர். மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட்நாராயணன் மனைவி விஜயாவிடம் புகார் குறித்து விசாரணை நடத்தினர்.

Also Read : மொபைல் ஆப் மூலம் கொள்ளையடித்த கும்பல்: கொள்ளையடிக்க பயன்படும் அந்த மொபைல் ஆப் எது?

பின்னர் இந்த சம்பவம் குறித்தான விசாரணை ஆவடி போலீசாருக்கு மாற்றப்பட்டநிலையில் பாஜக பிரமுகர்கள் சதீஷ்குமார், ரமணன்,விக்னேஷ், திருப்பதி ஆகிய 4 பேர் மீதும் மோசடி செய்தல், பொய்யாக ஆவணங்கள் புணைதல், கொலை மிரட்டல், கடத்தல், ஆபாசமாக பேசுதல்,  உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிலத்தை மோசடி செய்து தலைம்றைவாக இருந்துவரும் பா.ஜ.க பிரமுகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: