திமுக எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்பு புகார்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம்

திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், அவரது மனைவி காஞ்சனாவுக்கு மாற்றம் செய்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் வழக்கு

  • News18
  • Last Updated :
  • Share this:
சிட்கோ-வுக்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியத்துக்கு எதிரான புகாரை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம், அவரது மனைவி காஞ்சனாவுக்கு மாற்றம் செய்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இடத்தை மோசடி செய்து அபகரித்துள்ளதாகவும், அவரிடமிருந்து இடத்தை மீட்க வேண்டும் என மனுதாரர் தாரப்பில் வாதிடப்பட்டது.

இது சம்பந்தமாக அரசிடமும், சிட்கோ-விடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, பார்த்திபன் புகாரில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Published by:Vijay R
First published: