திருவள்ளூரில் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றும் , வீட்டிற்கு செல்லும் பாதை யாருக்கு சொந்தம் என்று மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மேல்பாக்கம் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் 44 வயதான ஜெகதீஷ் ,40 வயதான சரஸ்வதி தம்பதி . இவர்களது வீட்டிற்கு அருகே வசிப்பவர் 36 வயதான வினோத்குமார். இவர் சொந்தமாக கார், ஆட்டோ வைத்து டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வினோத்குமாரும், ஜெகதீஷும் தங்கள் வீட்டிற்கு செல்ல ஒரே பாதை வழியாகதான் செல்ல வேண்டும். வினோத் குமார் ஜெகதீஷ் வீட்டு வாசலில் தனது வாகனங்களை நிறுத்தி வந்துள்ளார். இதனால் ஜெகதீஷ்,மற்றும் வினோத்குமார் குடும்பத்தாரிடையே அடிகடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டுற்கு செல்லும் பாதை தனக்குதான் சொந்தம் என்று வினோத் பிரச்சனை செய்துள்ளதாக தெரிகின்றது. நிலதகராறு தொடர்பாக ஜெகதீஷ் குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு ஜெகதீஷ் பக்கமே சாதகமாக வந்துள்ளது.
ஆனால் மீண்டும் வினோத் மீண்டும் தனது வாகனங்களை வீட்டுவாசலில் நிறுத்தியுள்ளார். அதனால் இருகுடும்பத்தாருக்கும் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை வினோத் 30 திற்கும் மேற்பட்டவர்களை ஜெகதீஷ் வீட்டிற்கு அழைத்துவந்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷுன் மனைவி சரஷ்வரி நீதிமன்ற தீர்ப்பே உள்ள போது ஏன் பஞ்சாயத்து என்று சத்தம் போட்டுள்ளார்
அதனால் வினோத் சரஷ்வதியை தகாதவார்த்தையில் திட்டியதாக தெரிகின்றது. இதனால் மனமுடைந்த சரஷ்வதி வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
மேலும் படிக்க....Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜனவரி 29, 2021)
80 சதவீத தீ காயங்களுடன் கீழ்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதி சிகிச்சை பலநின்றி புதன்கிழமை உயிரிழந்தார் மனைவி இறப்பு தொடர்பாக ஜெகதீஷ் முத்தாபுதுப்பேட்டை காவல்நிலைத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சரஸ்வதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது மனைவி பவானி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வீடியோ
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.