நாங்க இறந்தபின் நிலத்தை அபகரித்துக்கொள்ளுங்கள்.. இடம் பிரச்னையில் தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

தற்கொலைக்கு முயன்ற பெண்கள்

45 வருடங்களாக எங்கள் அனுபவத்தில் இருந்த இடத்தை அபகரிக்க முயலும் இவர்கள் நாங்கள் இறந்த பின்பு அபகரித்துக்கொள்ளட்டும்

  • Share this:
    சென்னை தரணியில் இடம் பிரச்சனை காரணமாக மூன்று பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், அண்ணா தெருவில் வசந்தகுமார், கிருஷ்ணகுமார் சகோதரர்கள் குடும்பத்தார் வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கு எதிரே உள்ள 900 சதுரடி நிலம் சகோதர்களின் தந்தை காலத்திலிருந்து இவர்கள் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் (அண்ணாமலை, பாபு, சீனி, சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேர்) இவர்களது இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே முயன்று வருவதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதுபோன்று பிரச்சனை செய்து வருவதாகவும் சகோதரர்கள் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.

    Also Read: நடிகை கொடுத்த பாலியல் புகார்.. சென்னை டூ மதுரை.. மாஜி அமைச்சர் மணிகண்டனிடம் தொடரும் விசாரணை

    இன்று காலை சகோதர்கள் அனுபவத்தில் இருந்து வந்த 900 சதுரடி இடத்தை ஆக்கிரமிக்க செய்ய வந்ததாக கூறப்படும் நபர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.இந்நிலையில் அங்கு இருதரப்பினர்க்கு ஏற்பட்ட வாய்தகராறு காரணமாக கடந்த 45 வருடங்களாக எங்கள் அனுபவத்தில் இருந்த இடத்தை அபகரிக்க முயலும் இவர்கள் நாங்கள் இறந்த பின்பு அபகரித்துக்கொள்ளட்டும் என்று கூறி வசந்த்குமார் மனைவி லில்லி, கிருஷ்ணகுமார் மனைவி கேத்ரின் மற்றும் மகள் கல்பனா ஆகிய மூவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    Also Read: ஆன்லைன் வகுப்பில் வந்த ஆபாச மெசேஜ்.. மர்ம ஆசாமியால் ஆசிரியைகள், மாணவிகள் அதிர்ச்சி - சைபர் க்ரைமில் சிக்கிய இளைஞர்

    இச்சம்பவத்தை பார்த்த அவர்களுடைய உறவினர்கள் அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிய பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்றவர்களிடம் சமரசம் பேசி பின்னர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள் மீது புகார் கொடுக்கும்படி கூறினர். பின்னர் தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன் 
    Published by:Ramprasath H
    First published: