திருட்டு நகைகளை புதைத்த இடத்தில் மலம் கழித்துவிட்டு சென்ற முருகன் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

news18
Updated: October 12, 2019, 5:48 PM IST
திருட்டு நகைகளை புதைத்த இடத்தில் மலம் கழித்துவிட்டு சென்ற முருகன் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
முருகன்
news18
Updated: October 12, 2019, 5:48 PM IST
லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட முருகனிடமிருந்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கடைச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 28 கிலோ நகைகளை அள்ளிச் சென்றனர். இந்தக் கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திருச்சி காவல்துறை சார்பில் 7 தனிப்படைகளும், தஞ்சை போலீஸ் தரப்பில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையில் சிக்கிய மணிகண்டன் மூலம் அம்பலமானது.


அவனிடம் இருந்து லலிதா ஜூவல்லரி நகைக் கடைக்குச் சொந்தமான நான்கரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டனையும், சுரேஷின் தாய் கனகவல்லியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சுரேஷ் மற்றும் முருகனை கைது செய்வதற்காக அவர்களின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்துவந்தனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலை செங்கத்திலுள நீதிமன்றத்தில் சுரேஷ் நேற்று சரணடைந்தார். இந்தநிலையில், மற்றொரு முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முருகன் சமீபத்தில் பெங்களூரு நகர நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து முருகனை அழைத்துக் கொண்டு திருவெறும்பூருக்குச் சென்றுள்ளனர் பெங்களூரு போலீசார். அப்போது நகைகள் புதைக்கப்பட்ட இடம் தெரியாமல் இருக்க அங்கு மலம் கழித்து வைத்திருந்ததாக முருகன் கூறியுள்ளார்.

Loading...

புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 11 கிலோ நகைகளை பறிமுதல் செய்த பெங்களூரு போலீசார் முருகனை பெங்களூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையறிந்த தமிழக போலீசார் பெங்களூரு போலீசாரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும், பெங்களூரு போலீஸ் பிடியில் இருந்த முருகனை தமிழக போலீஸ் தற்போது தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ பார்க்க: பிரதமர் மோடி தன்னிடம் சகஜமாக பேசியதாக பேட்டரி கார் ஓட்டுநர் பெருமிதம்

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...