Home /News /tamil-nadu /

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..’ அருள்வாக்கு அன்னபூரணிக்கு எதிராக லட்சுமி ராமகிருஷ்ணன்

‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..’ அருள்வாக்கு அன்னபூரணிக்கு எதிராக லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

ஏமாறும் மக்கள் இருக்கும் வரைக்கும் இப்படியான பல அன்னபூரணிகள் உருவாகிட்டு தான் இருப்பாங்க என லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

    உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாகக் கூறி செங்கல்பட்டு சுற்றுப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர் ஓட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்துள்ளனர்.

    Also Read:  மாஸ் அருள்வாக்குக்கு திட்டம் போட்ட அன்னபூரணி அம்மா.. கட்டம்கட்டிய போலீஸ்

    தடையை மீறி அருள்வாக்கு சொல்ல அனுமதித்தால் மண்டபத்தின் உரிமையாளர் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  தலைமறைவாக உள்ள இந்த சாமியாரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த திடீர் சாமியார் அன்னபூரணி தனியார் சேனலில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்னை என வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

    Also Read: அந்நியன் ஸ்டைலில் அபார நடிப்பு.. போலீசாரையே அலற விட்ட பிக்பாக்கெட் திருடன்

    இந்த திடீர் சாமியாராகிவிட்ட அன்னபூரணி குறித்து இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, “எனக்கு இந்த அன்னபூரணி வீடியோ எல்லாம் அனுப்புனாங்க. நான் எல்லா வீடியோவும் பார்த்து சிரிச்சுட்டேன். அவங்களோட கடந்த காலம் பற்றி எதுவும் பேச வேண்டாம். அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை. ஒரு பிரச்னைக்காக நம்மகிட்ட வந்தாங்க நான் கொடுத்த அட்வைஸ்  எடுத்துக்கல  அவங்க ரூட்ல போய்ட்டாங்க.

    இப்ப அவங்க பண்றத நாம் விமர்சிக்கனும், அதை நாம் தடுக்கனும். எத்தனை  மக்களை அவங்க முட்டாள் ஆக்குறாங்க. ஏமாறும் மக்கள் இருக்கும் வரைக்கும் இப்படியான பல அன்னபூரணிகள் உருவாகிட்டு தான் இருப்பாங்க. மக்கள் நாம தான் விழிப்புடன் இருக்க வேண்டும்”. எனக் கூறியுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actress Lakshmi Ramakrishnan, Viral Video

    அடுத்த செய்தி