• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lakshmi IPS : லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக லட்சுமி ஐ.பி.எஸ். நியமனம் - கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

Lakshmi IPS : லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக லட்சுமி ஐ.பி.எஸ். நியமனம் - கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

லட்சுமி ஐ.பி.எஸ்

லட்சுமி ஐ.பி.எஸ்

ஐ.பி.எஸ் அதிகாரியான லட்சுமி, நேர்மையான, துணிச்சல் மிக்க பெண் என்ற பாராட்டைப் பெற்றவர். 24 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

  • Share this:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி லட்சுமி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், முன்னாள் அமைச்சர்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் தரப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், திமுகவினர் தமிழக ஆளுநரிடம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை கொடுத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ‘திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும்’ என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தார். அதன்படி, டெண்டர் முறைகேடுகள், முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற புகாரகளை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தத்துறை அதிகாரிகளின் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.-யாக ஐ.பி.எஸ். அதிகாரி கந்தசாமியை சமீபத்தில் தமிழக அரசு நியமித்தது. அவர் குஜராத்தில் அமித் ஷாவையே கைது செய்தவர் என்பதால் எதிர்கட்சி வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில், டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி லட்சுமி ஐ.பி.எஸ்., லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். 1997ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.-யாகப் பதவியில் அமர்ந்த லட்சுமி, பினனர் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்ட இவர், டி.ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பதவி வகித்தவர்.

Must Read : அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ் அதிகாரியான லட்சுமி, நேர்மையான, துணிச்சல் மிக்க பெண் என்ற பாராட்டைப் பெற்றவர். 24 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியுள்ள இவருக்கு 2032 வரை காவல் துறையில் பணியாற்ற கால அவகாசம் உள்ளது. சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை, இணை ஆணையராகவும் லட்சுமி ஐ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், லட்சுமி ஐ.பி.எஸ். கடந்த மாதம், தனிப்பட்ட விருப்பததை காரணம் காட்டி பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு, தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் அவரின் விருப்ப ஓய்வு கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: