Home /News /tamil-nadu /

ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை… இன்று வைகுண்ட ஏகாதசி!

ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை… இன்று வைகுண்ட ஏகாதசி!

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

ஏகாதசியன்று விரதம் இருந்தால் உடல் நலம் பெறும், மனக்கவலைகள் நீங்கும் என்று பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
    ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை என்பது கூறுவர். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசி நாட்களில் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்ததற்கான பலன் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    ஏகாதசியன்று விரதம் இருந்தால் உடல் நலம் பெறும், மனக்கவலைகள் நீங்கும் என்று பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

    மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய நிலையில், பக்தர்கள் கண் விழித்து, கடவுள் துதி பாடினர். அதிகாலையில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட அதன்வழியாக பெருமாளைக் கண்டு வழிபட்டனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சொர்க்க வாசலில் எழுந்தருளி தூப தீப நைவேத்தியம் கண்டருளினார்.

    ஆந்திர ஆளுநர் நரசிம்மன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையான் கோவிலில் முதலாவதாக சொர்க்க வாசல் வழியாகச் சென்றனர்.

    சொர்க்க வாசல் தரிசனத்திற்காக திருப்பதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று காஞ்சிபுரம் அஷ்டபூஜப் பெருமாள் கோவில், புதுச்சேரி வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Srirangam, Tirupathi

    அடுத்த செய்தி