உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் பணம் பறிமுதல்

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வென்சிலாஸ் என்பவரிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ரூபாய் பறிமுதலானது.

Web Desk | news18
Updated: March 15, 2019, 10:55 AM IST
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் பணம் பறிமுதல்
மாதிரி படம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 10:55 AM IST
தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொதுத்தேர்தல் 2019-ன் அறிவிப்புகள் வெளியாகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வந்ததும், அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கூடலிங்கம் என்பவர் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை லட்சம் ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோன்று ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வென்சிலாஸ் என்பவரிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ரூபாய் பறிமுதலானது. இதுமட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சேலைகளையும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும்.

Also see... பொள்ளாச்சி விவகாரம்... பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் எழுத்தாளர் கொற்றவை
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...