காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...

Web Desk | news18
Updated: July 19, 2019, 9:30 PM IST
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை...
காதலனின் தாய்
Web Desk | news18
Updated: July 19, 2019, 9:30 PM IST
விருத்தாசலத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலியின் தந்தை, காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர்  செல்வி . இவரது மகன் பெரியசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பவளி என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பவளி, திருச்சி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இருவருக்குமிடையேயுள்ள காதல் விவகாரம், பவளி வீட்டாருக்கு தெரிந்ததால், பவளிக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த செய்தி அறிந்த பவளி, தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.

இந்த  நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு இருவரும்  சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை பெரியசாமியின் தாய் செல்வி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பவளியின் தந்தை கொளஞ்சி, ”ஏன் என் மகளை உன் மகன் இன்னும் வீட்டிற்கு அழைத்து வந்து விடவில்லை, உன் மகன் என் மகளை எங்கு வைத்துள்ளான்” என்று கூறி செல்வியை கடுமையாக திட்டி அங்கு இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also watch: டிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் 

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...