ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்.. தவறான சிகிச்சையால் உயிரிழப்பு...

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்.. தவறான சிகிச்சையால் உயிரிழப்பு...

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு

Salem : சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சீல்வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் (அரவிந்த்) மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு 3 முறை அறுவை சிகிச்சை செய்ததில் பெண் உயிரிழந்தார். உறவினர்கள் உடலை வாங்கமறுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜலகண்டாபுரம் அடுத்த சவுரியூர் பகுதியைச் சார்ந்தவர் பூபதி (வயது 31).  இவரின் மனைவி சங்கீதா (வயது 28.) இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் விசைத் தறி தொழிலாளர்கள். இதனிடையே சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் (அரவிந்த்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்து,  வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளது என்று கூறியதாகவும்,  அப்போது இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கீதாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, தகவலறிந்த சங்கீதாவின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து உடலை வாங்காமல் டாக்டரை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனிடையே சிலர் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் ஆனந்தன், சந்திரலேகா தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த மருத்துவமனையில் அடிக்கடி இது போன்று தவறான சிகிச்சையால் பலர் உயிரிழந்திருப்பதாகவும், இந்த மருத்தவமனை தொடர்ந்து இயங்க அனுமதிக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அரவிந்த் மருத்துவமனை

உயிரிழந்த சங்கீதாவின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். எடப்பாடி வட்டசிரியர் லெனின், எடப்பாடி அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமரன் முன்னிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக, தீவிர சிகிச்சையில் இருந்த மூன்று நோயாளிகள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும், சாதாரண சிகிச்சையில் இருந்த சுமார் 20 நோயாளிகளை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சங்கீதாவின் உடல், உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Must Read : தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம் -ஆதரவாளர்களுக்கு உதய நிதி ஸ்டாலின் கடிதம்

இதனால், சுமார் எட்டு மணி நேர உறவினர்களின் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Published by:Suresh V
First published:

Tags: Hospital, Salem, Treatment