• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களே உஷார்... கணவன் மனைவி பிரச்சனையை அடுத்த ஆணிடம் சொல்ல வேண்டாம் - இதைப் படியுங்க!

பெண்களே உஷார்... கணவன் மனைவி பிரச்சனையை அடுத்த ஆணிடம் சொல்ல வேண்டாம் - இதைப் படியுங்க!

husband wife fight

husband wife fight

பெண்களே உஷார்... கணவன் மனைவி பிரச்சனையை அடுத்த ஆணிடம் சொல்ல வேண்டாம்.

  • Share this:
திருவண்ணாமலையைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சென்னையை சேர்ந்த நபரை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவ்வப்போது கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை எழுந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமைந்தகரையில் உள்ள ஒரு நிறுவனத்தில் அந்தப் பெண் பணிபுரிந்தபோது டூரிசம் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வரும் செய்யார் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பின் போது, கணவன் மனைவிக்குள் நடந்த பிரச்சனையை அந்தப் பெண் சிவக்குமாரிடம் சொல்ல, சிவகுமார் அந்தப் பெண்ணிற்கு ஆறுதல் சொல்வது போல அந்த பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நாளடைவில் அந்தப் பெண்ணிடம், "தற்போதுள்ள பெண்கள் எல்லாம் பிரச்சனையை ஜாலியாக எடுத்துக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்கள். அதுபோல என்னோடு இருந்தால் உன் பிரச்சனைகள் எல்லாம் மனதில் இருந்து மறைந்து விடும்." என கூறி காம வலையை விரித்துள்ளார்.  பின்னர் அந்தப் பெண்ணுக்கும் சிவகுமாருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இவர்களுக்கிடையே உள்ள தவறான உறவு பெண்ணின் கணவருக்கு தெரிய வர குடும்பத்தில் பிரச்சினை பெரிதாகி உள்ளது.

இதனால் அந்தப் பெண் சிவக்குமார் உடனான உறவை துண்டித்துக்கொள்ள கோபமான சிவகுமார், "நாம் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன்" எனக் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிராமல் இருக்க வேண்டுமானால் கடைசியாக ஒரே ஒரு முறை தனிமையில் இருக்க வேண்டும் என அந்தப் பெண்ணை சிவகுமார் நிர்பந்தித்துள்ளார்.

Also Read:  காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றி ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கொலை!

இதனால் பயந்துபோன அந்த பெண் இதற்கு சம்மதம் தெரிவித்துசிவகுமாருடன் தனிமையில் இருப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், சிவகுமார் கூறியது போல ஆபாச படங்களும் வீடியோக்களும் முன்னரே அவர் எடுத்து வைக்கவில்லை. ஆனால் இந்த முறை உல்லாசமாக இருந்ததை சிவகுமார் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் மிரட்டுவதற்கு எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் பெண்ணின் கணவருக்கு சிவகுமார் போன் செய்து தான் விரும்பும் போதெல்லாம் உனது மனைவியை அனுப்பாவிட்டால் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

கோபம் அடைந்த அப்பெண்ணின் கணவர் முடியாது எனக் கூறி இதற்கு மேல் தொந்தரவு செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவதாக எச்சரிக்கை செய்துள்ளார்.
இதனால் சிவக்குமார் தான் எடுத்து வைத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணும், பெண்ணின் கணவரும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Also Read:  இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

வழக்குப்பதிவு செய்த போலீசார் டூரிசம் அண்ட் டிராவல்ஸ் நடத்தி வரும் சிவக்குமாரை கைது செய்து அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டனர். மேலும், அவரது போனில் வேறு சில பெண்களின் ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் விவரங்களை திரட்டி வருகின்றனர். சிவகுமார் இன்னும் எத்தனை பெண்களை இதுபோல மிரட்டி உல்லாசமாக இருந்துவந்துள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: