கோவையில் சிறிய தங்கப் பட்டறைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை

கோவையில் சிறிய தங்கப் பட்டறைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை
மாதிரிப் படம்
  • Share this:
கோவையில் தங்க நகைபட்டறைகள் அனைத்தையும் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள சூழலில், சிறிய அளவிலான பட்டறைகளை இயக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தங்க நகை தயாரிப்பு தொழிலில் இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளது. கோவையில் மட்டும் தங்க நகை பட்டறை தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் உள்ள பெரிய தங்கநகை கூடத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்றாததால் 34 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து கோவையில் உள்ள அனைத்து தங்கநகை பட்டறைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார். 2 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வேலை வரத் தொடங்கியதாகவும், ஒருசில பெரிய நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையால் அதுவும் போய்விட்டதாக சிறு பட்டறை தொழிலாளர்கள் வேதனைபடுகின்றனர்.

நாற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு இயங்கும் பெரிய நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதியுங்கள். 3, 4 தொழிலாளர்களைக் கொண்டு செயல்படும் பட்டறைகளை திறக்க அனுமதியுங்கள் என்று இந்த தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏற்கெனவே பெரிய நிறுவனங்களால் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும், 2 மாத முடக்கம் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டிருப்பதாகவும் கூறும் தொழிலாளர்கள், சிறிய பட்டறைகள் செயல்பட அனுமதிக்காவிடில், தொழிலை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading