பொருளாதார மந்தநிலையால் சிறுதொழில்கள் முடக்கம்! தீபாவளி போனஸுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள்

பொருளாதார மந்தநிலையால் சிறுதொழில்கள் முடக்கம்! தீபாவளி போனஸுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 7:51 PM IST
  • Share this:
கோவையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. போனஸ் வழங்க வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென்று தொழிலாளர்களும், தொழில்முனைவோர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்தே சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தற்போது பொருளாதார மந்தநிலையும் சேர்ந்து கொள்ள அந்நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு மாத ஊதியமும், அதிகபட்சமாக 3 மாத ஊதியமும் போனசாக வழங்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு போனஸ் கிடைக்குமா? கிடைக்காதா என்பதே சந்தேகமாக உள்ளது. பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு, போனஸ் பற்றி பேசக்கூட முதலாளிகள் முன்வராதது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


முழுமையாக வேலையே அளிக்க முடியாத நிலையில், எப்படி போனஸ் தருவது எனத் தெரியாமல் குழம்பி தவிக்கின்றன சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள். கடந்த காலங்களைப் போல போனஸ் கொடுக்கும் நிலையில் தாங்கள் இல்லை என தொழில்முனைவோர்கள் வெளிப்படையாகவே வேதனையை வெளியிடுகின்றனர்.

கோவையில் செயல்படும் பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு வெளியில் கடன் வாங்கி போனஸ் கொடுத்துள்ளன. இந்த ஆண்டு எல்லாத்துறையும் நொடித்துப்போய் கிடப்பதால், வெளியில் கடன் வாங்கும் நிலை கூட இல்லை. எனவே, போனஸ் தருவதற்கு தனியே வங்கி கடன் தர வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

அதேநேரம், நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மிக குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளி, கோவை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியானதாய் இல்லாமல் கசப்பானதாய் மாறி இருக்கிறது.

Loading...

Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...