ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் - தொழிலாளர் ஆணையம் உத்தரவு

ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் - தொழிலாளர் ஆணையம் உத்தரவு

வாக்காளர்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நாள் அன்று விடுமுறை வெளியிடுவது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    1951-ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135பி-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டோர் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி வாக்களிக்க விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்கவேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: