தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன், கால்நடை துறைக்கு இணையமைச்சரானார் எல்.முருகன்!

பிரதமர் மோடியுடன் எல்.முருகன்

தாராபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார். எனினும், அவர் தற்போது மத்திய இணையமைச்சராகியுள்ளார்.

  • Share this:
தமிழக பாஜக தலைவரான எல்.முருகன்  மத்திய இணையமைச்சராக இன்று பதவு ஏற்றுக்கொண்டார்.

தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக  நியமிக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.  அவர் தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக  அதிமுக கூட்டணியில்  இணைந்து போட்டியிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியடைந்தார். எனினும், 20  ஆண்டுகள் கழித்து பாஜக தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. இந்நிலையில்,  மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதில், 43 புதிய  மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவரான எல்.முருகனுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து  குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.  அப்போது. எல். முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்து வந்தார். எல்.முருகனுக்கு மீன்வளத்துறை  மற்றும் தகவல் & ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: