ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஆட்டோவில் பயணம் - தயாநிதி, சேகர் பாபு, அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க எல்.முருகன் வலியுறுத்தல்

எல் முருகன், தயாநிதி மாறன்

ஆட்டோவில் பயணித்த தயாநிதி மாறன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஊரடங்கு விதிகளை மீறி மூவராக ஒரே ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை அரசு குழப்ப கூடாது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் இருப்பதை வைத்து மாணவர்களை தயாராக்க வேண்டும் என்றார்.

  ஊரடங்கு விதிமுறை நடைமுறையில் இருக்கும் போது ஒரே ஆட்டோவில் அமைச்சர்கள் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் மூவராக பயணம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  அதிமுக- பா.ஜ.க கூட்டணி கட்சிகள் மாறுபட்டு கருத்துகள் வருவது கட்சியின் நிலைப்பாடு. ஆனால் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார். தடுப்பூசி மையம் செங்கல்பட்டு, குன்னூர் பகுதியில் இருப்பது கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயனுள்ளதாக இருக்குமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் தடுப்பூசி மீதான பயத்தை காங்கிரஸ் தான் ஏற்படுத்தியது. ஆனால் இன்று தடுப்பூசி தொடர்பாக விமர்சனத்தை சிதம்பரம் வைப்பது ஏற்க கூடியது இல்லை என்றார். தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு உற்பத்தி செய்து வருவதாகவும் முருகன் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: