Thoothukudi Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் - எல்.முருகன்

Thoothukudi Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் - எல்.முருகன்

எல்.முருகன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசுகையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க உச்சநீதிமன்ற பார்வையில் நிபுணர் குழுவை ஏற்படுத்தலாம்.

    தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம். உயிர் பிரச்னை என்பதால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம். மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

    தேமுதிக சார்பில் கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், வழக்கறிஞர் பாலாஜி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்.

    Must Read :  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு

     

    பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் கே.டி.ராகவன். பாமக சார்பில் துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published: