தமிழக மக்களை ஏமாற்ற 7 திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார் - எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழக மக்களை ஏமாற்ற 7 திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார் - எல்.முருகன் குற்றச்சாட்டு

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக திமுகவால் ஆக்கமுடியுமா? அல்லது, ஒரு தலித்தை கட்சியின் தலைவராக ஆகமுடியுமா?

  • Share this:
    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ள 7 திட்டமும் ஏற்கனவே மத்திய அரசு நடைமுறைப் படுத்திவிட்டது என்றும், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய திட்டங்களை அவர் அறிவித்து இருப்பதாகவும் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எல்லா அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு கட்சி மக்களை எப்படி ஏமாற்றுவது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டு நேற்று 7 திட்டங்களை அறிவித்தது. அந்த 7 திட்டங்களும் மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள்” என்றார்.

    தொடர்ந்து பேசிய எல்.முருகன், “நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 36 லட்சம் வீடுகளுக்குப் புதிதாகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப் போகிறோம் என்கிறார். ஆனால் மத்திய அரசு இதை செய்து வருகிறது இன்னும் ஒருகோடி பேருக்கு செய்துகொடுக்க உள்ளது. எப்படி ஏமாற்றுவது எபதை ஸ்டாலினிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    எழில் மிகு நகரங்களை உருவாக்குவோம் என்கிறார். ஸ்மாட் சிட்டி திட்டம் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு என்பது மத்திய அரசின் திட்டம் அதையும் செய்வேன் என்கிறார். 2.5 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் இன்டெர்நெட் இணைப்பு வழங்க திட்டமிட்டு 1.8 லட்சம் கொடுத்தாகி விட்டது.

    பட்டியல் இன மாணவர்களை பற்றி பேசுகிறார், பட்டியலினத்தை பற்றி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தை இவர் கொடுக்கப்போவதாக சொல்கிறார். 18 ஆயிரம் உதவி தொகை 35 ஆயிரமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

    எம்ய்ஸ் கொண்டு வர கனவிலும் நினைக்கவில்லை இவர்கள், மகா ஊழல், மெகா ஊழல், காற்றில் ஊழல் என திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி இருந்த போது செய்தது. ஆனால், மக்களை நினைக்கவில்லை. 1.25 கோடி மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தவிர்க்க நவீன இயந்திரம் வாங்க ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

    விவசாயிகள் தங்களின் விளை பொருளுக்கான விலையை தாங்களே நிர்ணயம் செய்யலாம் என்ற திருத்த சட்டத்தை எதிர்த்து, பந்த் நடத்தியவர் ஸ்டாலின். ஏமாற்றுவது எப்படி என்பதை ஸ்டாலினிடமும் திமுகவிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    எழை மக்களுக்கு விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள் செய்தார்களா? நாங்கள் உங்கள் நிலங்களை அபகரிக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தால் மக்கள் நம்புவார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை இல்லையா?

    பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறார். இதை எப்படி கொடுப்பார் என்பதையும் பார்த்து விடுவோம். விவசாய கடனை ரத்து செய்வதாக கூறினார்கள் பல குடும்பங்கள் இவர்களை நம்பி இன்று நடுத்தெருவில்தான் நிற்கிறார்கள்.

    31.6 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைபு கொடுத்துள்ளது மத்திய அரசு. இலவச கழிப்பறை வசதி, விவசாயிகள் ஊக்கத்தொகை 6000 ரூபாய் கொடுத்துள்ளோம். இவ்வாறு, ஏற்கனவே மத்திய அரசு நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்களை செய்ய போவதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலும கமிஷனும் பிரிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கும். கட்ட பஞ்சாயத்து பண்ணுவது அவர்கள் வழக்கம். தமிழ் மக்களை கொச்சைப் படுத்தாமல் அவர்களால் இருக்கமுடியுமா? முடியாது. நிச்சயமாக முடியாது.

    தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக அவர்களால் ஆக்கமுடியுமா? அல்லது, ஒரு தலித்தை கட்சியின் தலைவராக ஆகமுடியுமா?  கேள்வி கேட்ட பெண்ணையே தாக்கியவர்கள், பெண் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். வாரிசு அரசியலை செய்யமாட்டோம் என அவர்களால் சொல்லமுடியுமா? இவ்வாறு போலியான நாடங்களை நடத்துகிறார் ஸ்டாலின்.

    Must Read : திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு உரை

     

    ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும். உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை என்ற பெயரில் பொதுமக்களிடம் கேட்டு அறிக்கை வெயிடுவோம். நாளை முதல் மூன்று நாட்கள் இதனை செய்யவுள்ளோம்.” இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
    Published by:Suresh V
    First published: