L Murugan: ‘நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும் காங்கிரசும்...’ - எல்.முருகன்

L Murugan: ‘நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும் காங்கிரசும்...’ - எல்.முருகன்

கராத்தே தியாகராஜன்-எல்.முருகன்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடி அளவில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
காங்கிரஸ் கமிட்டி பிரமுகர்  கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இனைத்துக்கொண்டார். இதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர்களும் பாஜகவில் தங்களை இனைத்துக்கொண்டனர். பின்னர் எல்.முருகன் கூட்டத்தில் பேசுகையில், நீட் தேர்வை கொண்டு  வந்தது திமுகவும் காங்கிரசும் என்று கூறினார்.

சென்னை திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொது செயலாளரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழக பாஜக மேலிட துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்ளிட்டஏராளாமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கராத்தே தியாகராஜன் அவருடைய ஆதாரவாளர்களுடன் பாஜகவில்லை தங்களை இனைத்துக்கொண்டர். இதேபோல் தென்சென்னை ரஜினி மக்கள் மன்ற தலைவர், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பாஜக-வில் தங்களை இனைத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், “தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அணைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலானோர் பாஜக-வில் இணைகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பாஜக வளர்ந்து வருகிறது.

தான் ஆட்சிக்கு வந்தால் பெறப்படும் மனுக்கள் மீது நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தற்போது 38 எம்.பி.களை வைத்திருக்கும் திமுக மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

ஸ்டாலின் வந்து மாற்றத்தை தர போவதில்லை மாறாக ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, பெண்களை இழிவுபடுத்துவது, இந்து கடவுள்களை அவதிமதிக்கவே ஸ்டாலின் வர துடிக்கிறார்.

கறுப்பர் கூட்டத்தை கண்டிக்காத ஸ்டாலின் பாஜக- வின் வேல் யாத்திரையால் கலவரம் உருவாகும் என்று காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஆனால் தற்போது பாஜக-வின் வளர்ச்சியை தடுக்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் பலர் வேலினை கையில் ஏந்துகின்றனர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடி அளவில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாஜக சீரழிப்பதாக ராகுல் கூறுகிறார். லட்சக்கணக்கில் தமிழர்கள் இலங்கையில் கொள்ளப்பட்டது காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் தான்.

மேலும் படிக்க...  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் - மத்திய அமைச்சர் அமித் ஷா

 

ஜல்லிக்கட்டு தடை செய்தது காங்கிரஸ், அனுமதியளித்தது பாஜக. நீட் தேர்வினை கொண்டு  வந்தது திமுகவும் காங்கிரசும், மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது ஸ்டாலின். ஸ்டர்லைட் ஆலைக்கு அனுமதி நீட்டித்தது ஸ்டாலின். ஆனால், பாஜக தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.” என்று கூறினார்.
Published by:Suresh V
First published: