செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் மெக்கானிக் ஷாப் அல்ல.. எப்போது துவங்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள் - எல்.முருகன்

எல்.முருகன்

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் லாரி மெக்கானிக் ஷாப் அல்ல என்றும், அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து எப்போது துவங்கலாம் என தெரிவிப்பார்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறினார்.

  • Share this:
    கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.என்.லஷ்மணன் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் புகைப்படத்திற்கு எல். முருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முருகன், நரேந்திர மோடி தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில்தான் முதல் அலை தாக்கம் ஏற்பட்டது அதை சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

    மேலும், கொரோனா இரண்டாம் அலையும் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறி முருகன், தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதேபோல் இந்த மாதத்திற்கு இரட்டிப்பாக வழங்கப்படும் என்றார்.

    குறிப்பாக, ஓரிரு நாட்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும் என்றும் தடுப்பூசி வழங்குவது மாநிலத்தின் மக்கள் தொகை, அங்கு உள்ள பாதிப்பு சதவீதம், கொரோனா தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருவதாக கூறிய எல்.முருகன், தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு வீணாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    தடுப்பூசி அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியது, கடந்த ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான். அதன் காரணமாகவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். ஆனால் தற்போது, அந்த நிலை மாறி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

    செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை, ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும். தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் முருகன் தெரிவித்தார்.

    Must Read : ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க... உங்கள் கையில்தான் இருக்கு மக்களே : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    இதைத் தொடர்ந்து சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசுகையில், அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்று தெரிவித்தார். அதேபோல் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
    Published by:Suresh V
    First published: