பாஜகதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் - எல்.முருகனின் கருத்துக்கு அ.தி.மு.க பதிலடி

பாஜகதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் - எல்.முருகனின் கருத்துக்கு அ.தி.மு.க பதிலடி

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

அதிமுக, பாஜக கூட்டணியில் யாருடைய தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்பதையும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்த கருத்துக்கு அன்வர் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில இன்று பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனக் கூறினார். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும்எனக் கூறினார்.

  அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்து, பிரச்சாரத்தையும் முதலமைச்சர் துவங்கி விட்டார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறிவரும் பா.ஜ.க, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

  இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக பேட்டியளித்த அதிமுக எம்.பி. அன்வர்ராஜா, பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் கூட்டணியில் நீடிக்க முடியும் என தெரிவித்தார்.

  சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெறுமா இல்லையா என்பது குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: