• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குஷ்பு, தி.மு.க எம்.எல்.ஏக்களை கட்சிக்கு வளைத்தது: 4 தொகுதிகளில் வெற்றி - பா.ஜ.க தலைவராக எல்.முருகனின் சாதனை பயணம்

குஷ்பு, தி.மு.க எம்.எல்.ஏக்களை கட்சிக்கு வளைத்தது: 4 தொகுதிகளில் வெற்றி - பா.ஜ.க தலைவராக எல்.முருகனின் சாதனை பயணம்

 பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

குஷ்பு, தி.மு.க எம்.எல்.ஏக்களை கட்சிக்கு வளைத்தது எல்.முருகனின் முக்கியமான அரசியல் நடவடிக்கையாக உள்ளது.

  • Share this:
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நேரத்தில் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டவர் எல்.முருகன்.
அப்படி தலைவராக நியமிக்கப்பட்டபோது முருகன் எடுத்துக் கொண்ட உறுதிமொழி தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் என சூளுரைத்தார்

தமிழகத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது சாதாரண காரியமல்ல என்று அனைத்து அரசியல் விமர்சகர்களும் செய்தியாளர்களும் தெரிவித்தனர். குறிப்பாக அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் கூட தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் என விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் கொண்ட இலக்கை உறுதியாக ஏற்றுக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டார் எல் முருகன். அவர் பதவியேற்ற காலம் தொட்டு பா.ஜ.கவை ஒரு பரபரப்பு அரசியலாக முன்வைத்தார். குறிப்பாக வேல் யாத்திரை என்று சொன்னால் யாரும் மறந்துவிட முடியாது.

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக தவறான சித்தரிப்பு குறித்து கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அதை தமிழகத்தின் தீவிர பிரச்சினையாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.

அதன் விளைவாகவே வேல் யாத்திரை தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது. ஆரம்ப கட்டத்தில் இந்த யாத்திரையை நடந்தால் தமிழகத்தில் கட்டாயம் கலவரம் நடந்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அதை தமிழக அரசு வேறுவிதமாக கையாண்டது. குறிப்பாக நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி திருத்தணியில் யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் முருகன்.

அன்று தொடங்கி 30 நாட்கள் தொடர்ந்து வேல் யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கேற்றப்பட்டது. மேலும் வேல் யாத்திரையை சிறு அசம்பாவிதம் நடைபெறாமல் கொண்டு சேர்த்தார்.

பின்னர் அ.தி.மு.க கூட்டணியில் 10 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை நீடித்து வந்தது. ஆனால் தங்களுக்கு கட்டாயம் 60 தொகுதிகள் வேண்டும் என பேச்சுவார்த்தையை தொடங்கிய பா.ஜ.க தலைவர் முருகன் கடைசியில் 20 தொகுதிகளை பெற்று தேர்தலை சந்தித்தனர்.

எல்.முருகன் பதவி ஏற்றதில் இருந்து பாஜகவில் யார் யாரெல்லாம் சேரப் போகிறார்கள் என்ற பதற்றம் தினசரி இருந்தது. குறிப்பாக வரலாற்றில் நடைபெறாத ஒரு நிகழ்வாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பா.ஜ.கவில் அதிரடியாக இணைந்தார்.  அதனைத்தொடர்ந்து திமுகவின் முக்கிய பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி, பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.கவை சற்று அசைத்துப் பார்த்தது

அதேபோல தேர்தல் வேட்பாளர் அறிவிக்கும் நேரத்தில் கூட தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் பா.ஜ.கவில் இணைந்தார். தமிழகத்திற்கு தேசிய அளவில் ஒரு முகம் தேவைப்பட்டது. அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சியில் குஷ்பு வைத்திருந்த மனக்கசப்பை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.கவில் இணைக்க வேண்டும் என்று அதற்கான பணிகளைத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார் முருகன். இப்படி நடிகர் செந்தில், நமிதா, கலா மாஸ்டர் என பெரும்பாலான திரைத்துறை சார்ந்த நடிகர்கள் பா.ஜ.கவில் இணைய துவங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து கட்சியை வலுப்படுத்தினார். அதன் விளைவாகவே தமிழ்நாடு முழுவதும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. குறிப்பாக ஈரோட்டில் சரஸ்வதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றது டெல்லியில் கூடுதல் கவனத்தைப் பெற்றது. ஏன் என்றால் அது பெரியார் பிறந்த மண். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்தாலும் தாராபுரம் தொகுதியில் நின்ற பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தோல்வியுற்றாலும் முருகனுக்கு பா.ஜ.க மத்திய அமைச்சர் பதவி வழங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: