பாஜக சார்பில் ‘நம்ம ஊர் பொங்கல்’ - எல்.முருகன் தகவல்

பாஜக சார்பில் ‘நம்ம ஊர் பொங்கல்’ - எல்.முருகன் தகவல்

எல்.முருகன்

தைப்பூச விடுமுறை அறிவிப்பு வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி என்றார் எல்.முருகன்

 • Share this:
  தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்வை கொண்டாட இருப்பதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து எல்.முருகன், தமிழக பாஜக சார்பில் வருகிற 9,10 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 5000 தாய்மார்கள், பெண்களுடன் கொண்டாட இருப்பதாக தெரிவித்தார். மேலும், தை முதல் நாளில், 10 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் சேரும் பரப்புரையை மேற்கொள்ள உள்ளோம் என்றும்,கூறினார்.

  பாஜகவுக்கு அதிகம் பேர் வந்து கொண்டிருப்பதாகவும், தமிழக பாஜகவை பொறுத்தவரை பூத் கமிட்டியை வலுப்படுத்த இருப்பதாகவும் கூறிய முருகன். தைப்பூச தினத்திற்கு விடுமுறை அளித்த முதல்வருக்கு அப்போது நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தைப்பூச விடுமுறை அறிவிப்பு வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்ப்பதாகவும் கூறினார்.

   

  மேலும் படிக்க... உ.பி. பாலியல் பலாத்கார-கொலை வழக்கு: கிராம வீட்டில் பதுங்கியிருந்த அர்ச்சகர் கைது

   

  பாஜக தேர்தல் அறிக்கை பொதுமக்கள் தேர்தல் அறிக்கையாகயாக இருக்கும் என்றும், விரைவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க இருப்பதாகவும்,  தொகுதிகள் கேட்டு நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை எனவும் கூறினார். மேலும் அண்ணன் ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக்கூறிவிட்டார். ரஜினி ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்றார்.

  இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்கிற பாஜகவின் கனவு, போகாத ஊருக்கு வழி தேடுவது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறிய கருத்து குறித்து பதிலளித்த எல் முருகன், "தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்," என்றார்.

  மேலும், மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வில் தமிழை கட்டாயம் சேர்ப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: