தற்போதைக்கு கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதாகவும் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.

தற்போதைக்கு கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து..
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
  • News18
  • Last Updated: August 14, 2020, 1:07 PM IST
  • Share this:
தமிழகத்தில் தற்போதைக்கு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்தாலும் 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது இதில் மாற்றம் வரலாம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எல். முருகன், அண்மைக்காலமாக தமிழக பாஜகவில் இணையும் திமுகவினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை குறிப்பிட்டார்.

இதனை மனதில் வைத்தே வரும் தேர்தலில் பாஜக - திமுக இடையில்தான் போட்டி என வி.பி.துரைசாமி கூறியிருப்பார் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.


Also read... ”உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுகவில் யாருக்கும் மரியாதை கிடையாது” - பொன்.ராதாகிருஷ்ணன்

தற்போதைக்கு தங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்ற அவர், தேர்தல் நேரத்தில் இந்த நிலைமை மாறலாம் என்றார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதாகவும் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading