கிராமப் புற நூலகங்களில் முரசொலி வாங்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் - பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கண்டனம்

எல். முருகன்

கிராமப் புற நூலகங்களில் தி.மு.க ஆதரவு நாளிதழ்கள் மட்டும் வாங்கப்படுகிறது என்று எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  கிராமபுற நூலகங்களில் தி.மு.க ஆதரவு நாளிதழ்களை மட்டும் வாங்க உத்தரவிட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும் அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

  தமிழக பா.ஜ.க விவசாய அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்காக 1 லட்சம் முகக் கவசம் தமிழக அரசுக்கு வழங்கும் திட்டத்தை சென்னை தி. நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல் முருகன் தொடங்கி வைத்தார்.

  அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழக பா.ஜ.க சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருவதாகவும், முன்களப்பணியாளர்களுக்கு 1 லட்சம் முகக்கவசம் தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினார்.

  திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 கொடுக்கிறேன் என்றார், இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் உடனடியாக கொடுக்க வேண்டும் என்றார்.

  நூலகங்களில் கட்டாயம் முரசொலி நாளிதழ் வாங்க வேண்டும் என அதிகார துஷ்பிரோகம் நடந்துள்ளது என குற்றம்சாட்டினார்.

  உடனடியாக தமிழக அரசு இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்றும் அனைத்து நாளிதழ்களை வாங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீட் விவகாரத்தில் மாணவர்களை குழப்பக் கூடாது என்றும் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான் என கூறினார். பாரப்பட்சம் இன்றி அனைத்து கோயில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: