’அநாகரீக செயலை யார் செய்தாலும் தண்டிக்கவேண்டும், கனிமொழி எம்.பி., உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்’ - எல்.முருகன்

நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என்று இன்று காலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

’அநாகரீக செயலை யார் செய்தாலும் தண்டிக்கவேண்டும், கனிமொழி எம்.பி., உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்’ - எல்.முருகன்
எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 2:56 PM IST
  • Share this:
திருச்சியில் பெரியார் சிலை காவி சாயம் பூசப்பட்டு, காலணி மாலை போடப்பட்டு அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் ஈவேரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரிக செயல் யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் ஆதரிக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. காவியை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் திமுகவில் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி அவர்கள், ஈவெரா பிறந்தநாளன்று நான் கூறியதை எடுத்துக்காட்டி, இதுதான் நீங்கள் அவருக்களிக்கும் மரியாதையா என கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி. போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனவே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை இது குறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டும்

பெரியார் சிலை அவமதிப்பு: தமிழக பாஜக அறிக்கை



இந்த அநாகரிக செயலில் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார்.  இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என்று இன்று காலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading