தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமனம்!
எல்.முருகன்
  • Share this:
தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவி காலியாக இருந்தது. சுமார் ஆறு மாத காலம் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்தது. இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன், தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.


அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் எல்.முருகன்தான் விசாரணையை முன்னெடுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பா.ஜ.க தலைமைக்கான எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஓரிரு நாளில் தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்பேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பட்டித்தொட்டியெல்லாம் கொண்டுசேர்த்து  பாஜகவை முதன்மையான கட்சியாக மாற்றுவதே முதல் பணி என்றும் எல். முருகன் தெரிவித்தார்.Also see:
 
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading