Home /News /tamil-nadu /

பேரறிவாளன் விடுதலை.. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது - கே.வி. தங்கபாலு

பேரறிவாளன் விடுதலை.. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது - கே.வி. தங்கபாலு

கே.வி. தங்கபாலு

கே.வி. தங்கபாலு

Salem : பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தங்கபாலு சேலத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதால் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை போய்விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு கருத்து தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டவாறு கலந்து கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கபாலு, யாரை குற்றவாளி எனக்கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ தற்போது அதே குற்றவாளியை விடுதலை செய்ததால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விட்டதாக தெரிவித்தார்.

    Must Read : நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி... வைரலாகும் போஸ்டர்கள்

    மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதால் நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

    செய்தியாளர் - திருமலை, சேலம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Congress, Perarivalan, Salem

    அடுத்த செய்தி