சாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ!

சாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ!
எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ
  • Share this:
மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளது. இந்த நாவலை சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்ததாக, கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் தமிழில் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள சங்ககால பாணர் பற்றியும் அவர்களின் வாழ்க்கையப் பற்றி விவரிப்பதாக அமைந்துள்ளது. கே.வி.ஜெயஸ்ரீ 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நவீன இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இவர் மலையாளத்தில் இருந்து இரண்டாம் குடியேற்றம், பால் சக்கரியா கதைகள், ஒற்றைக் கதவு, உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.


சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும் என்றும் தமிழ் படைப்புலகம் செழிக்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.


First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்