• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியா? பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி சூசகம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு போட்டியா? பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி சூசகம்

குஷ்பு

குஷ்பு

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பா.ஜ.க சார்பில் குஷ்பு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

  • Share this:
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பா.ஜ.க சார்பாக சமீபத்தில் கட்சியில் இணைந்த குஷ்பு போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை, நேற்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக கட்சி நியமித்தது. தொகுதியில் இருக்கும் பாஜக நிர்வாகிகளுடன் நேற்று குஷ்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இன்று தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீனவர் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் குஷ்புவும் பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சிடி ரவி, தெ’ன் மாநிலங்களில் மத்திய அரசிடமிருந்து அதிகம் நிதி கேட்டு பெற்றிருப்பது தமிழ்நாடு தான். எனினும் பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கிடையாது. ஒரு எம்.பி கிடையாது. குஷ்புவுக்கு வாக்களிக்க நீங்கள் தயாரா என்று கேட்டார்.

இதன்பின் செய்தியாளர்கள் குஷ்புவிடம் நீங்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட போகிறீர்களா என்று கேட்டதற்கு, சிடி ரவி குஷ்புவுக்கு வாக்களிக்கத் தயாரா என்று கேட்டதற்கு பா.ஜ.கவுக்கு வாக்களிக்கத் தயாரா என்று அர்த்தம். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சியின் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய குஷ்பு,  ‘தி.மு.கவின் தொகுதி என்று கருதப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக அசந்து போகும் அளவு பாஜக இந்த முறை வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தொடர்ந்து பல ஆண்டுகளாக தி.மு.க எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதியாக இருந்து வந்துள்ளது. இதற்கு முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் 2016ம் ஆண்டில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். தற்போது அந்த தொகுதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: