முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ட்விட்டர் கணக்கு முடக்கம்: டி.ஜி.பியைச் சந்தித்து புகார் அளித்த குஷ்பு

ட்விட்டர் கணக்கு முடக்கம்: டி.ஜி.பியைச் சந்தித்து புகார் அளித்த குஷ்பு

குஷ்பு

குஷ்பு

தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக  நடிகை குஷ்பு டிஜிபி சைலேந்திர பாபுவைச் சந்தித்து புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குஷ்புவின் ட்விட்டர் சமூக வலைதள கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் சைபர் கிரைமில் புகார் அளித்த குஷ்பு, தமிழக டி.ஜி,பி சைலேந்திர பாபுவைச் சந்தித்து நேரில் புகார் அளிப்பதற்காக மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தனது ட்விட்டர் கணக்கு கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் ஏற்கனவே பதிவிட்ட தகவல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இன்று தனது பெயரும் அதில் மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். உடனடியாக ட்விட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்ததில் தனது ட்விட்டர் கணக்கில் பாஸ்வேர்டு மாற்றப்பட்டிருப்பதாகவும், தனது கணக்கிலிருந்து சிலருக்கு புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டு இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தான் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.

இதையடுத்து டிஜிபியை சந்தித்து புகார் அளித்ததில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டர் கணக்கில் மீண்டும் தனது பெயர் ஹேக் செய்யப்பட்ட நபர்களால் மாற்றப்பட்டு உள்ளதெனவும், தனது பெயரை பயன்படுத்தி விரும்பத்தகாத கருத்துக்களை பதிவிட்டு, கலவரத்தைத் தூண்டுவது போன்ற கருத்துக்களை பதிவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமாக உள்ளது என குஷ்பு கூறினார்.

நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும் ராகுல் காந்தியை உளவு பார்க்க முடியாது. உளவு பார்த்து அதில் பா.ஜ.கவுக்கு எந்த பயனும் இல்லை என கூறினார்.

புதிய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போதும், எட்டு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டபோதும், குஷ்பு இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று தனது ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சரவையில் இடம் எதிர்பார்த்தீர்களா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு தான் ஆளுநர் நியமனம் பற்றி தான் அவ்வாறு தெரிவித்தேன் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியானால் ஆளுநர் நியமனத்தில் இடம் எதிர் பார்த்தீர்களா எனக் கேட்டதற்கு தனக்கு இன்னும் ஆளுநர் ஆகும் வயது ஆகவில்லை என கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது தனக்கு சந்தோஷம் என்றும், சட்டம் தெரிந்த, எளிதில் அணுகக்கூடிய நபர் என தெரிவித்தார்.

First published:

Tags: Kushbu