'உங்களுக்கு தைரியம் இருந்தா..' - கார்ட்டூனிஸ்ட் பாலாவை விளாசிய குஷ்பு..

குஷ்பு

கார் விபத்தில் சிக்கி காயம் ஏதுமின்றி தப்பிய குஷ்புவிற்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்தும் வரும் நிலையில், இந்த விபத்து போலியாக சித்தரிக்கப்பட்டது என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

 • Share this:
  கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கருத்திற்கு குஷ்பு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். கடலூரில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, மேல்மருவத்தூர் அருகே பாஜகவைச் சேர்ந்த குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது. டேங்கர் லாரி உரசியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

  இந்த விபத்தில், காரின் பக்கவாட்டில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நடிகை குஷ்பு விபத்தில் காயமின்றி தப்பித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடவுளின் கருணையால் உயிர் பிழைத்ததாகவும், தனது கணவர் சுந்தர் முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு தெரிவித்திருந்தார்.

  கார் விபத்தில் சிக்கி காயம் ஏதுமின்றி தப்பிய குஷ்புவிற்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், இந்த விபத்து போலியாக சித்தரிக்கப்பட்டது என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். கார்ட்டூனிஸ்ட் பாலா தனது ட்விட்டரில், “குஷ்பூ அவர்கள் மிகச்சிறந்த நடிகை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படம்“ என்று கார் விபத்தின் போது குஷ்பு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவரை விமர்சனம் செய்திருந்தார்.  கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பதிவிற்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “நான் போராடிய ஒருவர் இப்படி பேசுவதை கேட்டு வெட்கப்படுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், போலியான விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் மரணத்தை சந்திக்கும் அந்த நிமிடம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது. உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களது பேச்சு கோழைத்தனமாக உள்ளது. விரைவில் குணமடையுங்கள் பாலா“ என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: