Khushbu Sundar | நடிகை குஷ்பு விபத்தில் சிக்கினார்.. முருகன் அருளால் உயிர் பிழைத்ததாக ட்வீட்..

Khushbu Sundar | நடிகை குஷ்பு விபத்தில் சிக்கினார்.. முருகன் அருளால் உயிர் பிழைத்ததாக ட்வீட்..

விபத்தில் சிக்கினார் குஷ்பு

  • Share this:



    கடலூரில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, மேல்மருவத்தூர் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது. டேங்கர் லாரி உரசியதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விபத்தில், காரின் பக்கவாட்டில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக நடிகை குஷ்பு காயமின்றி தப்பித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


    கடவுளின் கருணையால் உயிர் பிழைத்ததாகவும், தனது கணவர் சுந்தர் முருகனின் மேல் வைத்திருந்த நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் குஷ்பு.


    Published by:Gunavathy
    First published: