முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாட்டுப்புற கலைப் பிரிவில் இருந்து குறவன், குறத்தி ஆட்டம் நீக்கம்... தமிழ்நாடு அரசு..!

நாட்டுப்புற கலைப் பிரிவில் இருந்து குறவன், குறத்தி ஆட்டம் நீக்கம்... தமிழ்நாடு அரசு..!

குறவன், குறத்தி நடனத்திற்கு தடை

குறவன், குறத்தி நடனத்திற்கு தடை

Kuravan, Kurathi dance banned | குறவன், குறத்தி நடனத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்பட்டு வந்த குறவன், குறத்தி நடனம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், இந்த ஆட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், இதனால், குறவன், குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் ஆடல், பாடல் நிகழ்வுகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனமாடுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் ஆடல், பாடல் நிகழ்வுகள் குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்தால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; ஆஸ்கர் வென்றது 'RRR' திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல்..!

இதனடிப்படையில், குறவன், குறத்தி என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்வதாகவும், கரகாட்டம் என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன், குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. குறவன் குறத்தி ஆட்டம் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திடுமாறு கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

First published:

Tags: Dance, Tamilnadu