• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குரங்கணி காட்டுத்தீ விபத்து : 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு - பிரத்தியேக அறிக்கை

குரங்கணி காட்டுத்தீ விபத்து : 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு - பிரத்தியேக அறிக்கை

குரங்கணி காட்டுத்தீ

குரங்கணி காட்டுத்தீ

குரங்கணி காட்டுதீ விபத்தில் 23 பேர் பலியான விவகாரத்தில். மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோரின் முறைகேடுகளுக்கு, வனத்துறையினரும் உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது.

  • Share this:
    தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதிக்குள் கடந்த 2018ம் ஆண்டு, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற சுற்றுலா பயணிகள் 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் அதுல்யா மிஸ்ரா தலைமையிலான குழு,  நேரடியாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. 3 ஆண்டுகளாகியும் வெளியாகாத அந்த அறிக்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

    அதன்படி, அனுமதி இல்லாமல் சென்ற மலை ஏற்ற குழுவை தடுத்து நிறுத்தாத வனத்துறையினர், மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். மலை ஏறச் சென்றவர்களின் உடல் தகுதி ஏதும் பரிசோதிக்கப்படவில்லை எனவும், குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை வனத்துறையினர் உறுதி செய்யவில்லை என்றும் சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. குரங்கணி பகுதியில் விதிமீறல்களை தடுக்க வனத்துறையில் போதுமான ஆட்கள் இல்லை எனவும்,

    காட்டுத் தீ குறித்து எச்சரிக்கை கொடுக்கும் தொழில்நுட்பமும் கைகொடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்றாண்டுகளாகியும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காத சூழலில், புதியதாக அமைந்துள்ள திமுக அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: