குன்னூரில் பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டும் இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

குன்னூரில் பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டும் இளைஞர் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

வீடியோ காட்சிகள்

திருமணம் செய்து கொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் குன்னூரில் சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டும் வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    குன்னூரில் கோவில் ஒன்றில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டி உள்ளார். இளைஞர் தாலி கட்டுவதை பள்ளி மாணவி சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.



    அந்த வீடியோவில், பள்ளி மாணவிக்கு கோயில் ஒன்றில் வைத்து, குன்னூரை சேர்ந்த கெளதம் என்ற இளைஞர் தாலி கட்டுகிறார். இந்த வீடியோ கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொலக்கம்பை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: