ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை..

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை..

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக் டாக் அபிராமியின் சகோதரர் தற்கொலை..

சென்னை குன்றத்தூரில் கள்ளகாதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் தற்கொலைக்கான காரணம் என்ன? 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டிக்டாக் கள்ளகாதலனுக்காக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொன்ற அபிராமியை யாரும் மறந்திருக்க முடியாது. கொலை வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் அவரது சகோதரர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் விவகாரமா? நடந்தது என்ன?

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி திருமணமாகி 7 வயதில் மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருந்தனர். டிக்டாக்கிற்கு அடிமையான அபிராமி தனது ஆண் நண்பர்களுடன் காதல் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் தனது டிக்டாக் காதலனுடன் சேர்ந்து வாழ இரண்டு குழந்தைகளுக்கும் கணவருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்தார்.

இதில் கணவர் தப்பித்த நிலையில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அபிராமி சிறையில் உள்ளார்.

அபிராமியின் சகோதரர் 27 வயதான பிரசன்ன மணிகண்டன் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் நீண்ட நேரமாக யாருடனே செல்போனில் சண்டை போட்டு வந்ததாக தெரிகின்றது.

Also read: பெண் மருத்துவர் உயிரிழந்த விவகாரம்: பொதுமக்கள் தொடர் போராட்டத்தால், பாதையை நிரந்தரமாக மூட முடிவு

இந்நிலையில் இரவு நேரத்தில் தனது அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் சடலத்தை கைபற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இருவருக்குமான பிரச்னையில் பெண் மணிகண்டனை பிரிந்ததாக தெரிகின்றது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் சோகமுடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Abirami, Crime News, Tik Tok