ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குமுதம் வார இதழின் ஆசிரியர் கல்யாணராமன் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குமுதம் வார இதழின் ஆசிரியர் கல்யாணராமன் காலமானார்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்

குமுதம் வார இதழின் மூத்த பத்திரிகையாளரான ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மூத்த பத்திரிக்கையாளரான ப்ரியா கல்யாண ராமன்(56). இவரது இயற்பெயர் ராமசந்திரன். குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்தவர். இவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர் ஆவார். இவருக்கு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இளம் வயதிலேயே இவர் குமுதம் பத்திரிகையில் பணியில் சேர்ந்தார்.

  குமுதல் இதழில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நவால்களை இவர் எழுதி உள்ளார். ஆன்மீக துறையில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ப்ரியா கல்யாண ராமன் எழுதிய சிறுகதைகள், நாவல்கள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

  கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணி புரிந்து வந்த ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக பிரமுகர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

  முதல்வர் மு.க.ஸ்டாலினும் ப்ரியா கல்யாராமன் மறைவுக்கு இரங்கல் தெரவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். 30 ஆண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன் பல எழுத்தாளர்களை ஊக்குவித்தவர்; குமுதம் இதழை காலத்துக்கு ஏற்ப நவீனப்படுத்தியவர். ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவன பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்றுள்ளார்.

  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

  துணை நிலை தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள இரங்கிலில், குமுதம் வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ப்ரியா கல்யாணராமன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் தனக்கென முத்திரை பதித்த அவரது இழப்பு பத்திரிகை துறைக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் , பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: CM MK Stalin