கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

 • Share this:
  முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் இத்திருவிழா, முருக பெருமானுக்கு மிகவும் உகந்த விழாவாகும். முருகன் உள்ள அனைத்து ஸ்தலங்களிலும் இந்த பங்குனி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் ராகு தோஷம் நிவர்த்தி தலமான கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கடந்த 19ம் தேதி கொடியேற்றமும், 23ஆம் தேதி ஒலை சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று காலை நடைபெற்ற திருத்தேர் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை, உற்சவரான பிரகன் நாயகி சமேத நாகேஸ்வரர்சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

  மேலும் படிக்க... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை நிறைவு...  திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் நாகேஸ்வரா நாகேஸ்வரா என கோஷமிட்டவாரே தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

  செய்தியாளர்: எஸ்.குருநாதன் தஞ்சாவூர்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: