ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கும்பகோணம் மேயர் பதவி - தகவல்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு கும்பகோணம் மேயர் பதவி - தகவல்

அண்ணா அறிவாலையம்

அண்ணா அறிவாலையம்

மதிமுகவிற்கு ஆவடி மாநகராட்சியில் துணை மேயர் பதவியும், விசிகவிற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கான அறிவிப்பு இன்று மாலை திமுக வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். குறிப்பாக 21 மாநகராட்சிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

    இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று மாலை திமுக வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதில், காங்கிரசிற்கு கும்பகோணம் மாநகராட்சியும் சேலம் மற்றும் காஞ்சிபுரம் துணை மேயர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு மண்டலத் தலைவர் பதவி காங்கிஸிற்கு ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை விட்டுக் கொடுக்க திமுக தற்போது முன்வந்துள்ளது.

    மதிமுகவிற்கு ஆவடி மாநகராட்சியில் துணை மேயர் பதவியும், விசிகவிற்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு துணை மேயர் பதவி இடங்களை ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Congress, Local Body Election 2022