மீண்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு திரும்பிய குமரவேல்!

பிரபல நேட்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் கடலூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

news18
Updated: August 3, 2019, 1:57 PM IST
மீண்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு திரும்பிய குமரவேல்!
கமல்ஹாசனுடன் குமரவேல்
news18
Updated: August 3, 2019, 1:57 PM IST
மக்களவை தேர்தல் சமயத்தில் கட்சித்தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகிய குமரவேல், தற்போது மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக குமரவேல் நியமிக்கப்பட்டார். பிரபல நேட்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் கடலூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திடீரென, கட்சியில் இருந்து விலகுவதாக குமரவேல் அறிவித்தார். மேலும், கட்சித்தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருந்தார்.


இந்த நிலையில், குமரவேல் தற்போது மீண்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு திரும்பியுள்ளார். ”மீண்டும் வீட்டுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி” என்று கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.கடந்த மக்களவைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை பெற்று ஆச்சரியப்பட வைத்தது. தென்சென்னை, கோவை உள்ளிட்ட சில தொகுதிகளில் அக்கட்சி மூன்றாமிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...