குடியாத்தம்: பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி..

கோப்புப்படம்.

பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ் மொழி நீக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 • Share this:
  குடியாத்தத்தில் உள்ள பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ்மொழி நீக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள இந்த ஏடிஎம் மையத்திற்கு வரும் பெரும்பாலான கிராம மக்கள் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தே பணத்தை எடுத்து வந்தனர்.  ஆனால், தமிழ்மொழி இன்று முதல் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள் மட்டுமே உள்ளன. இந்த மொழிகளைத் தெரியாத மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் அது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது.

  சென்னையிலும் சில இடங்களில் இந்த சிக்கல் தொடர்வதாக புகார்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
  Published by:Rizwan
  First published: