• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் தொடக்கம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் தொடக்கம்

கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)

கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)

மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலை கட்டுமான பணிகள் முடிவடைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நீடிக்கும்.

  • Share this:
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுமார் 3000 வெளிமாநில தொழிலாளர்களுடன் கூடங்குளத்தில் கட்டுமானப் பணிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறனுடைய இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இவை அடிக்கடி பழுது ஏற்பட்டு சரி செய்யப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் 3000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். கொரோனா  தொற்று காரணமாக கடந்த மாதம்  பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளையும் நிறுத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

தேவையான பராமரிப்பு பணிகள்  மட்டும் செய்துகொள்ள அனுமதி அளித்திருந்தது. எனினும் அரசு உத்தரவுக்கு மாறாக கூடங்குளத்தில் அணு உலை கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதில் 2500 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

கட்டுமானப் பணிகளில் பொது இடைவெளியை கடைபிடித்து பணிபுரிவது இயலாத காரியம். நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்று வெகுவாக குறைந்து 10 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலை கட்டுமான பணிகள் முடிவடைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நீடிக்கும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவிவரும் இந்தச் சூழலில் அணு உலை கட்டுமான பணிகளை துவக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் நெல்லையில் கொரோனா தொற்று அதிகரித்து விடுமோ என் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தடையை மீறி தொழிலாளர்கள் பணிபுரிவது குறித்து அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.  சாதாரண கூலித் தொழில் செய்யும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டு, இது போன்ற அரசுப் பணிகளை மேற்கொள்வது சரிதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.













சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: