கூடங்குளம் நான்காவது அணு உலைக்காக ரஷியாவில் இருந்து புறப்பட்ட கொதிகலன் & கோர் கேச்சர்...!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்ப?

கூடங்குளம் நான்காவது அணு உலைக்காக ரஷியாவில் இருந்து புறப்பட்ட கொதிகலன் & கோர் கேச்சர்...!
News18
  • News18
  • Last Updated: December 22, 2019, 8:35 AM IST
  • Share this:
நான்காவது அணுவுலைக்கான கொதிகலன் மற்றும் கோர் கேச்சர் ஆகியவை ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரோசட்டோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கோர் கேச்சர் என்பது அணுவுலையின் முக்கியமான பாதுகாப்பு அமைப்பாகும். அணுவுலையின் மையப்பகுதிக்கு கீழ் இந்த கோர்  கேச்சர் அமைக்கப்பட்டிருக்கும். அணுஉலைக்கு வரும் மின்சாரம் முற்றிலுமாக நின்று விட்டாலும் கூட இந்த கோர் கேச்சர் செயல்படும்.

ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அணுவுலையின் மையப் பகுதியில் உள்ள அணுக்கழிவுகளை இந்த கோர் கேச்சர் பாதுகாத்து கதிரியக்கம் வெளியே பரவாமல் தடுக்கும். இதன் எடை 147டன் ஆகும். ஏற்கெனவே மூன்றாவது உலையில் இந்த கோர் கேச்சர் பொருத்தப்பட்டுவிட்டது.


3, 4 உலைகளுக்கான வால்வுகளும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ளன. ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலமாக நேற்று அனுப்பி வைக்கப்பட்ட இந்த பொருட்கள் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடலில் பயணித்து ஜனவரி மாதம் இறுதியில் கூடங்குளம் வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது அணுவுலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் 34.62 விழுக்காடு பணிகள் முடிவடைந்து இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: December 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading